வாழ்வில் கலக்கும் கல(ள)ப்படும் - திரு.சூரஜ். எஸ்.வி.எஸ் இயக்குனர்

வாழ்வில் கலக்கும் கல(ள)ப்படும் - திரு.சூரஜ். எஸ்.வி.எஸ் இயக்குனர்

‘கலப்படம், கலப்படம், எங் கும் எதிலும் கலப்படம், அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்’ மேற்சொன்ன வரி கள் கலைவாணர் என்.எஸ். கே. ஒரு படத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டு மென்கிற நோக்கில் அன்றே பாடியுள்ளார். அவரது வார்த்தைகள் இன்று நூற்றுக்கு நூறு பொருந்துவதாகும். அந்தளவிற்கு இன்று கலப் படம் நம்முடைய வாழ்வில் கலந்துவிட்டது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அதின் ஆற்றலும் நன்மைக்காக ஒரு புறம் வளர்ந்து கொண்டிருக்க தீமைக்கும் தீணியிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. பணத் தாசை மிக்கவர்களும், சமூக விரோதிகளாலும் இன்று தங் களின் தேவைக்காகவும் சுய நலத்திற்காகவும் மக்களின் உயிர்களோடு விளையாடு கிறார்கள். மக்களும் ஒன்றும் அறியாதவர்கள் போல அவர்களின் மாய வலையில் விழுந்து விடுகிறார்கள்.

கலப்படத்தினால் இன்று உடல்நலம் மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார நலனும் பாதிக்கும் என்கிற விஷயம் அதிர்வளிக்கிறது. நம்முடைய ஆரோக்கியமே நம்முடைய நாட்டின் ஆரோக்கியம்.’ என தொடங் குகிறார் எஸ்.வி.எஸ் நிறுவ னத்தின் இயக்குநர் திரு.சூரஜ் அவர்கள். நான்காம் தலைமுறை யாக தம்முடைய குடும்பத் தொழிலை கவனித்துக் கொள்ள களமிறங்கியிருக் கும் இளைஞரான திரு. சூரஜ் அவர்கள், 82 ஆண்டுகளாக தம்முடைய குடும்பம் கவனித்து வந்த தொழிலை இன்று பொறுப்பேற்று நடத்தி வருகிறார். வளர்ந்து வரும் இளைஞர்களை முன்னிறுத்தி நாங்கள் அவரை சந்தித்த போதிலும், சமூக விழிப்புணர்வு சார்ந்த மற்றொரு கட் டுரையை படைக்க நேர்ந்தது. அதுதான் இந்தியாவையே அழிவுக்கு கொண்டு செல் லும் உணவுக் கலப்படம்.

‘எல்லோருக்குமே காலை யில எழுந்ததும் காபியோ, டீயோ குடிக்கலைனா தலையே வெடிச்சுடும். ஆனா அதுல முழுக்க முழுக்க காபி தூள் அல்லது டீ தூள் தான் இருக்கு என நாம் உறுதியா சொல்லிட முடியாது. அந்தளவுக்கு கலப் படம் கலந்திருக்கு. விஷயத்துக்கு வரேன். இன்னைக்கு எத்தனையோ சூப்பர் மார்க்கெட் வந்தாலும், இன்னைக்கும் ஒரு நட்புணர் வோட, உணர்ச்சியோடு நம் முடைய தாத்தா, அப்பா இன் னைக்கு நம்மனு ஒரே பல சரக்கு கடையில தான் பொருட்கள் வாங்குவோம். காரணம் நமக்கும் அவுங் களுக்கும் இருக்க ஒரு நட் புறவு. இத்தனை வருஷமா வாங்குரோமே அந்த மளிகை சாமான் கலப்படம் இல்லாம சரியா இருக்கா அப் படிங்கிறத எத்தன பேர் பாத் திருக்கோம்? இவ்வளவு ஏன்? சுமார் 15 வருஷத் துக்கு முன்னாடி மட்டன் விலையவிட சிக்கன் விலை ஜாஸ்தியா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு? மட்டன் விலை யில் சிக்கன் பாதி விலை கூட இல்ல. இதப்பத்தி மக்கள் சிந்திக்கிறதில்லை.

ஏன் விலை குறைவா இருக்கு? நடைமுறையில இது சாத்தியப்படுமானு அவுங்களுக்குள்ள கேள்வி வரணும். விலை கம்மியா கிடைக்குதுனு தரமில்லாத கலப்படம் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது இன்னைக்கு பாதிப்பு ஏற்ப டுத்தாம இருந்தாலும் 40 வய சுக்கு மேல் சர்க்கரை நோய், 50 வயசுல மாரடைப்பு, 60 வயசுல மரணம்னு வாழ்க்கை சட்டுனு முடிங்சுடுது. நம்ம வீட்டிலேயே பாருங்க தாத்தா, கொள்ளு தாத்தா லாம் நிச்சயம் 80 வயதுக்கு மேற்பட்டோராகி தான் இறந்துருப் பாங்க. காரணம் சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி.

சைக்கிள்ல போனா நேரம் ரொம்ப வீணாகும்னு சொல்லி, எல்லாரும் பைக்குக்கு மாறு னாங்க. ஆனால் இன்னைக்கு அவசரத்துல தானே எல் லாரும் போறாங்க. கலப்பட பொருட்கள பத்தி பேசுனா ஒவ்வொருதவங்க, ஒவ்வொ ருத்தவங்க மேலதான் பழி சுமத்துராங்க. விலை கம்மி யாக கிடைக்குது, என்னோட தகுதிக்கு இதுதானு வாடிக் கையாளர் சொல்றாரு, இந்த பொருளுக்கு தான் மார்ஜின் அதிகமாக இருக்கு, அத் தோட மக்களும் இதை தான் விரும்பி கேட்கிறாங்கனு கடைக்காரர் சொல்றாரு.

விலை வாசி ஏறிகிட்டே போகுது, வியாபாரத்தை அந்த விலைக்கு செஞ்சா மக் கள் வாங்க மாட்டங்கனு ஒரு வட்டம் மாதிரி உற்பத்தியா ளர் சொல்றாரு. இங்க தப்பு யார் மேலனு பாக்குறதவிட, அதன் பயன்பாட்ட கட்டுப் படுத்த மக்கள் அந்த பொருட் களை வாங்காம இருந்தாலே கலப்பட பொருட்களின் உற் பத்தி கொரஞ்சுடும்கிறது என் னோட ஒரு கருத்து.

ஒரு பொருள் கலப்படமா இல்லையானு கண்டுபிடிக்க கெமிக்கல் டெஸ்டிங், டிஷ்யூ பேப்பர்னுலாம் எதுமே தேவையில்ல. அத்தோட அத ஆராய்ச்சி பண்ணி பாக்க மக்களுக்கும் பொறு மையில்ல. எளிமையா ஒரு கடையில கடலை பருப்பு என்ன விலைனு கேளுங்க. நிச்சயம் 130 ரூபாய் முதல் 135 ரூபாய் கிட்ட இருக்கும். அடுத்து அதே கடையில கடலை மாவு என்ன விலைனு கேளுங்க 70 ரூபாய்ல இருந்தே இருக் குனு சொல்லுவாரு. இது லயே தெரிஞ்சுக்கலாம். கலப்படம் அப்படீங்கிற ஒண்ணு நம்முடைய உடல் நலத்தோடு கூட நாட்டின் பொருளாதார வளத்தையும் சேத்து பாதிக்குது. இன்று தொழிற்நுட்பமும் விஞ்ஞா னமும் நம்ம நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துருக்கு, வளர்ந்து கிட்டு இருக்கு. பலரும் இன்று ஐடி கம்பெனி, எம்என்சினு தங்களுடைய திறமையை வெளிநாட்டு நிறுவனத்துக்கு அடமானம் வெச்சுட்டு இருக்காங்க.

காரணம், இன்னைக்கு இருக்கவங்ளோட வாழ்க்கை முறை. உதாரணமா ஒருத்தர் பலசரக்கு கடை வெச்சுருக் காரு. காலையில கடைய திறந்து உட்கார்ந்தா இரவு 11 மணிக்கு மேல தான் வீட்டுக்கே வராரு. இப்படி யிருக்க அவரோட பசங்களுக்கு கடையவோ, அல்லது அவுங்க நிர்வாகத்தையோ எப்படி பாத்துக்க ஆசை வரும்.

கடைக்கு ஒருவர் முதலா ளியாக இருந்தாலும், அவர் இல்லாத நேரங்களிலும் வியாபாரம் சரியா நடக்கு தானு கவனிச்சுக்க ஒருத்தரை வைக்கனும். இன்னைக்கு அரசாங்கம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுனு சொன்னத மக்கள் ஏத்துகிட்டாங்க, இனி வரும் காலமும் முன்னப் போல இருக்காது.

அரசாங்கமும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைய ஊக்கப்படுத்துராங்க. எனவே, பலசரக்கு கடைக்காரங்க, வியாபாரம் பண்றவங்க கார்ட் ஸ்வைப் மிஷின் வைங்க. எல்லா பரிவர்த்தனைக்கும் கணக்கு வெச்சுக்கங்க. வியாபார தொழில் தொடங் குனவங்க பெரும்பாலும் தலைமுறை தலைமுறையா பாத்துட்டு வந்திருப்பாங்க. எனவே, பழசு பத்தி பேச வேணாம். இனி வரப் போற தலைமுறைக்கு வழி வாசல ஏற்படுத்துங்க. தொழில்நுட்பத்தை வியாபாரத்துக்குள்ள கொண்டு வாங்க. தர மான பொருட்களை மட் டும் வாங்கி, தரம் மாறாம உற்பத்தி செஞ்சு மக் களுக்கு கொடுங்க. நேரத்தை கவனமாக செல வழிச்சு, புது புது தொழில் நுட்பத்தை கொண்டு வாங்க. நம்ம என்ன கற்றுக் கொடுக்கிறோமோ அத தான் நம்ம சந்ததியும் கத்துக்கும். நம்ம தரமான பொருட்களை மக்களுக்கு கொடுக்கிறப்ப அது எப்படி இன்னும் தரமாக கொடுக்கலாம்னு வர சந்ததி நினைக்கும். கலப்படமான பொருட்களை நம்ம கொடுத்தா நம்ம சந்ததி இன்னும் எப்படி கலப்படம் செய்யலாம் அப்படினுதான் நினைக்கும்.

Tags: News, Lifestyle, Art and Culture, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top