தொழில்நுட்பம் தெரிந்தவன் தொழில் தெரிந்தவன்

தொழில்நுட்பம் தெரிந்தவன் தொழில் தெரிந்தவன்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்என்பதைப் போல, வீட்டுக்கு ஒரு பொறியாளரை வளர்த்தெடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அனைவரும் உள்ளோம். காரணம்...  இன்றைய படிப்பு என்றே சொல்ல வேண்டும்.

சக்கரத்தில் ஆரம்பித்த மனிதனின் அறிவியல் வளர்ச்சி, இன்று சர்க்கரை நோய் கண்டறியும் மின்னணு சாதனம் வரை, அதுவும் கையடக்கக் கருவியாக, மருத்துவரின் துணையின்றி அறிந்து கொள்ளும் வகையில் வந்துவிட்டது. இப்படி தினம் தினம் ஒரு மின்னணு சாதனம் உருவெடுத்துக் கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் நாம் கற்று கொள்ளவேண்டும்.. அல்லது அறிந்து கொள்ளவாவது வேண்டும் என்பது திண்ணம். காரணம்... இன்றைய இளைஞர்களின் தொழில்முறையானது... தொழில்நுட்பத்துறையே. எங்கும் தொழில் நுட்பம்... எதிலும் தொழில் நுட்பம்... தொழில்நுட்பம் தெரிந்தவன் தொழில் தெரிந்தவன். இதுபோன்ற, இன்றைய தொழில்நுட்ப அறிவைப் பெற “Embedded System” என்ற படிப்பு உள்ளது.

“Embedded System” என்ற தொழில்நுட்பம் நாம் அன்றாடம் உபயோகிக்கும் Washing machine, A/C, Cell phone, Calculator, TV, Computer என ஆரம்பித்து, குழந்தைகள் விளையாடும் நவீன பொம்மைகள் வரை உள்ளது. மருத்துவத்துறையை எடுத்துக் கொண்டால் ECG மிஷின், ஸ்கேனிங் மிஷின் என அது விரிவடைகிறது. ஊடகத்துறையில் தகவல் பரிமாற்றத்திற்கும், வீடியோ, கேமரா, Wireless Mic என விஸ்வரூபம் எடுக்கிறது. ஜவுளிக் கடைகளில் Barcode Scanner ஆக பயன்படுகிறது. கோவில்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு அரணாக பயன்படுகிறது. இதற்கும் மேலாக அலுவலகங்களில் CCTV கேமரா எனச் சொல்லப்படும் Monitoring Device களிலும், வருகைப் பதிவேடு மிஷின்களிலும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இப்படி... இது பல பரிமாணங்களோடு நம்மோடு உறவாடிக் கொண்டிருக்கிறது.

Embedded System என்ற படிப்பை படிப்பதால் நாமே ஒரு விஞ்ஞானியாகக் கூட வரஇயலும். இல்லையெனில் பல தொழில்நுட்பப் பூங்காக்களில் இதற்கான வேலைவாய்ப்புகள் அதிகம். Bengaluru, Chennai, Mumbai, Pune என இதற்கான வேலை வாய்ப்பு இடங்கள் அதிகம் உள்ளன. சுயமாகத் தொழில் தொடங்கும் அறிவைக் கூட, நாம் இதனால் பெறமுடியும். பள்ளிக் குழந்தைகள்கூட கற்றுக் கொள்ளும் வகையில் இதன் எளிமை உருவெடுத்துள்ளது என்பதே இதன் ஆச்சரியம். வயது பாகுபாடின்றி இந்த தொழில்நுட்பத்தை அனைவரும் கற்கலாம்... தொழில்நுட்பவாதியாக உருவாகலாம்.

இப்பொழுது இந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது மத்திய அரசாங்கம் பல நல்ல திட்டங்களை இளைஞர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

“Skill India” திட்டத் தின் கீழ் மத்திய அரசாங்கம் பல்வேறு துறைகளில் இளை ஞர்களுக்காக திறன் மேம் பாட்டுப் பயிற்சியினை நடத்தி வருகிறது. இதனை செயல்படுத்தும் வகையில் நமது “Kalvi Higher Education and Research Institute” மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு திறன்மேம்பாட்டுப் பயிற்சியினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் Embedded systems, Computer Hardware and Computer Aided Product Design (CAD) ஆகிய பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சேர்வதற்கான கல்வித் தகுதி - 10th / 12th / I.T.I / பாலிடெக்னிக் / இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் படித்து முடித்து வேலைவாய்ப்பின்றி இருப்பவர்கள் மற்றும் வேலை புரிந்துகொண்டே தனது திறனை மேம்படுத்த நினைப்பவர்கள் இப்பயிற்சியின் கீழ் சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சியுடன் கூடுதலாக தங்களுக்கு ஆங்கில மொழித் திறன் மற்றும் ஆளுமைத் திறன்பயிற்சியும் வழங்கப் படுகிறது. இப்பயிற்சியின் முடிவில் மத்திய அரசு நிறுவனச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. மேலும் முன்னனி நிறுவனங்களில் தங்களின் திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

இப்பயிற்சி முகாமின்கீழ் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. இதில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் தங்களின் விருப்பத்தினை www.kalvigroup.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை மிக குறைந்த அள விலேயே உள்ளது. முதலில் வருவோர்க்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

Tags: News, Lifestyle, Art and Culture, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top