நடிகர்களை அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதை ஏற்க முடியாது – விஜய்சேதுபதி

நடிகர்களை அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதை ஏற்க முடியாது – விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி 96 படத்தின் வெற்றிக்கு பின்னர்  ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
 
இதன் போது மேலும் தெரிவித்த அவர், இங்கு எல்லாம் அரசியல் தான். தொலைக்காட்சி மிக்ஸி குறித்து மட்டும் பேசுவது அரசியல் இல்லை. ஒரு ஜாதியைத் தூக்கிப்பேசுவது, இன்னொரு ஜாதியை இழிவுபடுத்துவது எல்லாமே அரசியல்தான். சினிமாவில் அரசியல் பேச வேண்டும். அப்பொழுதுதான் அவை மக்களிடம் போய்ச் சேரும். தனிகைக்குழுவின் ஒப்புதலோடு வரும் படங்களை அச்சுறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
 
மேலும் சினிமாக்காரங்களுக்குக் குளிர்விட்டுப் போய்விட்டதாக சில அரசியல்வாதிகள் விமர்சிக்கின்றனர். உங்களை வாக்களித்து தெரிவு செய்துள்ளோம் எங்களை அச்சுறுத்துவது உங்களின் வேலை கிடையாது. எங்களுடைய கருத்து தவறாக இருந்தால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும் ஆனால் அச்சுறுத்துவது மிகவும் தவறு என சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top