ரகசிய திருமணம்? - நடிகை ஸ்ருதி!

ரகசிய திருமணம்? - நடிகை ஸ்ருதி!

நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கும், அவரின் டான்ஸ் மாஸ்டருக்கும் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக பேச்சாகக் கிடக்கிறது. பெங்களூரில் வளர்ந்தவர் தமிழ் பெண்ணான ஸ்ருதி ஹரிஹரன். கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். அர்ஜுனின் நிபுணன் படத்தில் நடித்திருந்தார். தற்போது துல்கர் சல்மானின் சோலோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ருதி ஹரிஹரன் தனது டான்ஸ் மாஸ்டரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கன்னட திரையுலகில் ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்கள். என்ன ஸ்ருதி ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களா என்று அவரிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நான் அந்த வதந்தி குறித்து கேள்விப்பட்டேன். எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் நடந்துள்ளது என்றார்.

நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்து கொள்ளுமாறு என் குடும்பத்தாரும் வலியுறுத்தி வருகிறார்கள். எனக்கு திருமணம் நிச்சயமானதும் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று ஸ்ருதி தெரிவித்தார். நான் என் டான்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. நான் திரையுலகை சேர்ந்த யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றார் ஸ்ருதி. 

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top