பிரபல நிறுவனம் விஜய் சேதுபதிக்கு வழங்கிய சலுகை!
Posted on 13/12/2018
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு படத்தில் பணியாற்றிய அனைவரும் வருகை தந்திருந்தனர்.
குறித்த விழாவிற்கு விஜய் சேதுபதி மட்டும் மற்றொரு படப்பிடிப்பில் இருந்தமையால் தாமதமாக வருகைதந்திருந்தார். இருப்பினும் இரசிகர்களின் கரகோஷம் வானை பிளந்தது.
அவரை அழைத்துவருவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஹெலிகொப்டரை அனுப்பிவைத்திருந்தது. மேலும் விழா முடிந்ததும் அவர் இடைநடுவில் விட்டு வந்த படப்பிடிப்பு தளத்திற்கும் ஹெலிகொப்டரின் மூலமே அனுப்பிவைத்துள்ளனர்.
Tags: News, Hero, Madurai News